கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் 2வது நாளாகவும் மக்கள் அற வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்ட  அறிவித்தல்  விடுக்கப்பட்ட  போதும் இதுவரையில் உப பிரதேச செயலகமாகவே செயற்பட்டு வருவதனை கண்டித்தும்,இவ் வருடம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த பிரதேச செயலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையை கண்டித்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் 2வது நாளாகவும் மக்கள் அற வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.