200 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா, அதில் 15 மதுக்கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளதா?- சஜித் பிரேமதாச

   



FL4 பிரிவின் கீழ் 200 மதுபான நிலையங்களை திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 15 அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

200 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா, அதில் 15 மதுக்கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வெளியிட வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் அனுமதியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்கு புறம்பாக செயற்படவில்லை எனவும், சரியான முறையில் கேள்வி எழுப்பினால் முழுமையான பதில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.