FREELANCER
நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்த்துவோம்
எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இயங்கி வரும் சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பினரால் காந்தி பூங்காவில் இருந்து கல்லடி பழைய பாலம் வரை கவன ஈர்ப்பு பேரணி ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இப் பேரணியில் கூட்டுறவு உருவாக்குவோம், வியர்வை சிந்தி உழைத்த உழைப்பில் கை வைக்காதே, பெண்களின் உழைப்பை சுரண்டாதே , கடன் இல்லாத வாழ்வாதாரம் வேண்டும், நுண் கடனை ரத்து செய் உணவு பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்தல் வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தி சூர்யா பெண்கள் அமைப்பினர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பழைய கல்லடிப் பால வாசலில் பெண்கள் அமைப்பினரால் சிறிய வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருந்தன . அத்தோடு ஏராளமான சுய தொழில் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
மேலும் தெருக்கூத்து , விழிப்புணர்வு நாடகம் போன்றவை சூர்யா பெண்கள் உறுப்பினர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.