மட்டக்களப்பு பட்டிப்பளையில் இடம்பெற்ற மகளீர்தின நிகழ்வு-2024

 




 

"அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர்  எஸ்,சுதாகரின் வழிகாட்டலில் நடைபெற்ற "போதைப் பாவனையினை தடை செய்வோம்" எனும் தொனிப் பொருளை வலியுறுத்தி பெண்கள் ஒன்றிணைந்து நடாத்திய பேரணியானது கொக்கட்டிச்சோலைச் சந்தியில் இருந்து பட்டிப்பளை பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

இந் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி  புவிக்குமார் மேனகாவின் தலைமையில்  சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர், (சமூக அபிவிருத்தி) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி வலய பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO அபிவிருத்தி உத்தியோகத்தர்  மற்றும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவர், நிருவாக உறுப்பினர்கள், CBO தலைவர்கள், பயனாளிகள் எனப் பலரின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.