களுத்துறை தொடங்கொட ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் புனராவர்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று கணபதி ஹோமத்துடன் கிரியைகள் ஆரம்பமானது
அத்துடன் விஷேட வழிபாடுகளும் இடம் பெற்றது..
தொடர்ந்து பால்குட அபிஷேகம் எண்ணெய்க்காப்புடன் 20ம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.
கும்பாபிஷேகம் பிரதம சிவாச்சார்யார் அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க வைத்தீஸ்வர குருக்கள் தலைமையில் கிரிகைகள் நடைபெற்று விபூதி பிரசாதத்துடன் பக்தர்களுக்கு அன்னதானமும் அம்மன் அருளால் வழங்கப்படுகிறது .
பக்த அடியார்கள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றேகுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைக்கிறது .