மட்டக்களப்பு மண்முனை- வடக்குப் பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளீர் தினம்-2024



















































































கல்லடி செய்தியாளர்

மட்டக்களப்பு மண்முனை- வடக்குப் பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளீர் தினம்  வியாழக்கிழமை (14) மாலை    காந்தி பூங்காவில்      இடம்பெற்றது.

"அவளது பலம் நாட்டிற்குப் பலம்"- எனும் தொனிப் பொருளில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் உற்பட செயலக  உத்தியோகத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .     கௌரவ அதிதியாக  கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நா.தனஞ்சயன்  கலந்து கொண்டார்

இதன்போது  கிராம  மாதர் அபிவிருத்தி  சங்கங்கள், மற்றும் மகளீர் சங்கங்களைச் சேர்ந்த திறமையாகச்  செயற்பட்ட அங்கத்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் விழிப்புணர்வு நாடகம், கலாசார நாடகம், கவிதை, செயலூக்க உரை என்பன நிகழ்த்தப்பட்டன.

இம் மகளீர் தினத்தில் பொது மக்கள்,  கிராம அபிவிருத்தி சங்கம், மாதர்   கிராம அபிவிருத்தி சங்கம்,  சமுர்த்தி சங்கம்,  மகளீர் சங்கத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.