சஜித்நாத்
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு "மட்டு முயற்சியாண்மை 2024" எனும் தொனிப்பொருளில் இன்று உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி நடை பெற்றது .
இந்த விற்பனை கண்காட்சியை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V..வாசுதேவன் அவர்கள் இன்று காலை பிரதேச வளாகத்தில் திறந்து வைத்தார்..
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான வேணி , மற்றும் யசோ ஆகியோரின் ஒழுங்கு படுத்தலின் கீழ் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது .
கண்காட்சியில் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
பெருமளவிலான வாடிக்கையாளர்கள் செயலகத்திற்கு வருகைதந்து ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்கிச்சென்றதை காணக்கூடியதாக இருந்தது .