(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர்)
சங்காரவேல் பவுண்டேசனால் 13 ஆவது ஆண்டாக இவ்வாண்டு பல்கலைக்கழகத்திற்குபொறியியல் மற்றும் மருத்து பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களில் சமூர்த்தி உதவி பெறுவோரில் 9 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (17) கல்லடி கிறீன்கார்டின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
சங்காரவேல் பவுண்டேசன் ஆலோசகரும், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கே.ஹரிகரராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண மொபிடல் நிறுவன பிரதி பொது முகாமையாளர் டாக்டர் வை.கோபிநாத், இமாயா நீர்ப்பாசனத் திட்ட முகாமையாளர் பி.சசிகாந், ஆய்வு கூடப் பொறியியலாளர் கே.லோகாட்சரனின் தாயார் திருமதி கோகுலதேவி கமலநாதன், ,இரசாயனப் பொறியியலாளர் கே.சதூசனின் தாயார் திருமதி பாலகௌரி குமாரதாஸ், மின்சாதனப் பொறியியலாளர் எல்.பிரசந்தியா மற்றும் சிவில் பொறியியலாளர் எல்.தர்சிக்கா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 9 பேர் புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்டனர்.
சங்காரவேல் பவுண்டேசனால் இதுவரை மருத்துவம், பொறியியல், சட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த 101 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இதுவரை புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.