சஜித்நாத்
கல்லடி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (24) தீமிதிப்பு வைபவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது தேவாதிகள், அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு, அடியவர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் தீமிதிப்பில் கலந்து கொண்டனர்.
இத்தீமிதிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான மக்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.
இவ்வாலய உற்சவம் கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, இன்று இடம்பெற்ற தீமிதிப்பு மற்றும் பள்ளயச் சடங்குடன் நிறைவு பெற்றது.