(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நகரில் கையடக்க தொலைபேசி மீள்நிரப்பும் கடைகளின் முதலாளிகள் இருவரின் பேக்கரி நடாத்தும் நண்பன் ஒருவரின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றில் பதிவிட்டு அந்த தொலைபேசி ஊடாக அவர் சுகயீனமாக வைத்தியசாலையில் இருப்பதாக நாடகமாடி கடை முதலாளிகளிட மிருந்து ஈசிகாஸ் மூலம் 22 ஆயிரம் ரூபாவை மோசடி கும்பலிடம் ஏமாந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனார்.
நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள பேக்கரி ஒன்றினை நடாத்திவரும் முதலாளி ஒருவரின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றில் மோசடிகும்பல் ஒன்று பதிவிட்டு அந்த இலக்கத்தின் ஊடாக அவருடைய நண்பர்களான அந்த பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி மீள்நிரப்பும் கடை முதலாளி மற்றும் நகர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையிலுள்ள மீள்நிரப்பும் கடை முதலாளி ஆகிய இருவரிடம் சம்பவதினமான நேற்று காலையில் பேக்கரி முதலாளி பேசுவதாக தெரிவித்து தான் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டு கழுத்தில் பன்டேஜ் செய்துள்ளதாகவும் உடன் பணம் தேவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது
இதனையடுத்து அவரின் புகைப்படம் பதிவிட்ட போலி இலக்கத்திற்;கு மீள்நிரப்பும் கடடை முதலாளி ஒருவர் 8 ஆயிரம் ரூபாவை ஈசிகாஸ் மூலம் அனுப்பிள்ள நிலையில் அடுத்த கடை முதலாளி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 14 ஆயிரம் ரூபாவை அனுப்பியுள்ளார்.
இதன் பின்னர் மாலையில் குறித்த பேக்கரி கடை பகுதிக்கு சென்ற போது பேக்கரி முதலாளி கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருதை கண்டதையடுத்து அவரிடம் சென்று வினாவிய போது போலி கையடக்க தொலைபேசி இலக்கம் மூலம் மோசடியாக பணம் கொள்ளையிட்டதை அறிந்து கொண்ட பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த மோசடி கும்பல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் இவ்வாறான மோசடி கும்பல் செயற்பட்டு வருவதாகவும் அவர்களிடம் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.