பெறுமதி சேர் வரி (திருத்தச் ) சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 


பெறுமதி சேர் வரி (திருத்தச் ) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக  35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற  பெறுமதி சேர் வரி, சமூக அறவீட்டு வரி உள்ளிட்ட வரி சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது பெறுமதி சேர் வரி சட்டமூலத்துக்கு சபை அனுமதி வழங்குகிறதா?  என சபாநாயகர் வினவிய போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வாக்கெடுப்பை கோரினார்.

அதன் பிரகாரம் வாக்களிப்பு நடத்தப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது .