கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 




கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் சேதமாகியுள்ளது.
இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.