'மக்கள் போராட்டம்' எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட 33 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 'மக்கள் போராட்டம்' எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட துமிந்த நாகமுxவ, லஹிருவீரசேகர உள்ளிட்ட 33 பேர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார், தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. 

இதையடுத்தே 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.