FREELANCER
.தமிழ் நாடு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா-நித்யா தம்பதியினரின் மகன் அனிஷ் அவர்கள் டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்..
இவர் சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.
50-க்கும் மேற்பட்ட உலக சாதனைகள் மற்றும் மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் படைத்தவர் ஆவார்.
கியூபில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து பல உலக நாடுகளின் தேசியக் கொடியை செய்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார்.
வால்ட் ரெக்கார் யுனிவர்சிட்டி -இலண்டன் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றவர்.
தற்போது விவசாயத்தில் ரோபோடிக்ஸ் முறைகளைப் பயன்படுத்தி சாதனைப் படைத்துள்ளார்.
இவரது சாதனை ஆசியா பசிபிக் வால்ட் ரெக்கார்ட்ஸ் -இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனை இவருடைய நான்காவது அறிவியல் கண்டுபிடிப்பாகும்.சாதனைகளை கடந்து சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.இந்திய அஞ்சல் துறை இவருக்கு மை ஸ்டேம்ப் வெளியிட்டது.இவரின் சாதனைகள் மற்றும் சமூக பணிகளின் அடிப்படையில் மதிப்புறு முனைவர் பட்டம் -யுனிவர்சிட்டி ஆஃப் நியூ ஜெருசலம் வழங்கி கௌரவித்தது.ஆர்கன் டோனர் ஃபேஷன் ஷோ டெல்லியில் பங்கேற்று (faceapp group) இவருக்கு Hero of the Society award வழங்கியது.
மேலும் மிகச் சிறிய வயதிலேயே பல்வேறு உலக சாதனைகள் படைத்தற்காக Mr.Bharath Rathan award வழங்கி சிறப்பித்தது.மேலும் Global Kids Achievers Award, Rising Youth Super Stars award போன்ற எண்ணற்ற விருதுகளையும் டெல்லியில் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி பார்வை நாளிதழ் இவருக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கி புகழாரம் சூட்டியது.
Hoghwoods Entertainment -சரித்திர நாயகனுக்கு Tamil Nadu Achievers Award வழங்கியது.
மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் தன்னிகரற்ற தமிழன் விருது, நட்சத்திர தமிழன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் மெக்சிகோ, இலங்கை போன்ற நாடுகளில் இருந்தும் World Contest winner,Best Student award,Best social activist award சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
பல்வேறு சாதனைகள் படைத்து தான் பிறந்த மண்ணிற்க்கும், தாய் நாட்டிற்க்கும் பெருமைச் சேர்ப்பதே தனது இலட்சியம் என தெரிவித்தார்.
சாதனை நாயகனுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.