கடந்த சில வாரங்களாக பதிவான காட்டுத் தீயினால் 55 ஹெக்டேர் காடுகள் அழிவடைந்துள்ளன என வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதமென வனவள பாதுகாப்பு திணைக்களம் கூறியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் காட்டுத் தீயை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வாரத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.