கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் அக்குடும்பத்தின் உறவினர் ஒருவர் என அறுவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் ஒட்டாவா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைப் பிரஜையான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.