மட்டக்களப்பு "ஆணிவேர்" உற்பத்திகள் நிவனத்தினரால் மறைந்த கதை மாமணி மாஸ்டர் சிவலிங்கம் ஐயா அவர்களின் 91 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் முகமாக மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவின் இல்லத்திற்கு முன்பாக பொது மக்களுக்கு "சிறப்பு கூழ்" வழங்கும் நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தனர் .
சிவலிங்கம் ஐயா மீது பெரு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஏராளமான கல்லடி வாழ் பொதுமக்கள் சிவலிங்கம் ஐயாவின் வாசஸ்தலத்திக்கு வந்து பாரம்பரிய மண் குவளையில் வழங்கப்பட்ட கூழை மிக ஆர்வத்துடன் பெற்று அருந்தியதுடன் உற்றார் உறவினர்களுக்கு வழங்குவதற்காக்க வாங்கியும் சென்றனர் , மேலும் சிவலிங்கம் ஐயாவினால் எழுதப்பட்ட மாணவர்களுக்கான மகாபாரதக் கதை என்ற நூலும் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
சிவலிங்கம் ஐயாவின் உற்றார் உறவினர்கள் அவரின் இல்லத்திற்கு வருகைதந்து அவரின் உருவப்படத்துக்கு அஞ்சலி செழுத்திச் சென்றனர்