முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பொய்யான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இது போன்ற தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.