இலண்டன் ஈழப்பதஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால்
தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்புக்கும் நிகழ்வு இன்று செங்கலடி பகுதியில் இடம்பெற்றது.
இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான
நா.ஆனந்தராஜா
லோ.அனோஜன் ஆகியோரது ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வானது,
செங்கலடி ரமேஸ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் அதன் பிரதமகுரு சிவசிறி. த.ஜெயக்குமார் குருக்கள் அவர்களின் பங்கேற்புடன் அவரது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
தலா 42 ஆயிரம் ரூபாய் பொறுமதியான குறித்த துவிச்சக்கர வண்டியானது. இலண்டனில் வசிக்கும் கிரோசிக்கா கிரிசாந்தன் அவர்களுடைய 12 வது பிறந்த நாளையொட்டி , இரண்டு வறிய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு முயற்சிக்காக குறிப்பிடத்தக்கது.