மட்டக்களப்பு நாவற்குடா சிவன் ஆலயத்தில் ஸ்ரீ மகா சப்த்தரிஷி ஹோமமும், சிவராத்திரி பூஜையும்.














மட்டக்களப்பு   நாவற்குடா பிரதேசத்தில் 2000 .ம்      ஆண்டுகளுக்கு முற்பட்ட  நாகர் வம்சத்தால் நிர்மாணிக்கப்பட்ட   சிவன் ஆலயத்தில் ஸ்ரீ மகா  சப்த்தரிஷி ஹோமம் 2023.03.07 ம்   திகதியும் ,  சிவராத்திரி பூசை 2023.03.07 ம் திகதியும் நடை பெற்றது ..
சிவ ஸ்ரீ சச்சினாநனந்த மூர்த்தி   குருக்கள் தலைமையில் ஸ்ரீ மகா  சப்த்தரிஷி ஹோமம் நடை பெற்றது .
சிவராத்திரி தினத்தில் சிவ பூஜையும் , சிவனுக்கு பாலாபிசேகமும் , சிவ அடியார்களுக்கு உருத்திராட்சமும்  வழங்கி வைக்கப்பட்டது .
ஏராளமான சிவ பக்தர்கள் ஹோம நிகழ்விலும் சிவராத்திரி பூஜையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
சிவனின் பெருவிழாக்கள் அனைத்தும் சிவ தொண்டர் திருக்கூடத்தின் ஏற்பாட்டில் நடராஜர்  சைவ சித்தாந்த பயிற்சி மையம் மற்றும் இந்து மகளிர் மன்றமும் இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது .