மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கு முகமாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ அவர்களின் ஒழுங்கு படுத்தலின் கீழ் நூற்றாண்டு விழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது
இதில் ஒரு சிறப்பு நிகழ்வாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
வாவிக்கரை வீதி-02 பிரதேசத்தில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷனுக்கு சொந்தமான காணியில் இளைய சமுதாயத்தினரின் தொழில் கல்வி மேம்பாட்டுக்காக சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது
முதல் அடிக்கல்லை அகில உலக இராமகிருஷ்ண மிஷன் பொதுச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் நட்டு வைத்தார்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ,பிரதம அதிதியாகவும் அகில உலக இராமகிருஷ்ண மிசன் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் முதன்மை அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் J . முரளிதரன் , பிரதேச செயலாளர் v .வாசுதேவன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்
இவ் நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் T. சரவணபவன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள உயர் அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் பொதுமக்கள், நலம் விரும்பிகள் இந்து ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் தென்னிந்திய வேலூர் மாவட்ட அகில உலக இராமகிருஷ்ண மிஷன் பொதுச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ்
அவர்களால் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் v .வாசுதேவன், மாநகரசபை முதல்வர் T. சரவணபவன் மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள உயர் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் இந்து ஆலய நிர்வாக தலைவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌவித்தது குறிப்பிடத்தக்கது .