எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானங்களின் விலைகள் குறைகைப்பட மாட்டாது .

 


எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானங்களின் விலைகள் குறைக்கப்படும் என தற்போது பரவலாகப் பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கலால் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

மதுபானங்களின் விலையை குறைக்கும் நோக்கில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதுபான விலைகள் குறைக்கப்படும் என ஊடகங்களில் தற்போது செய்திகள் வெளியாகி வருவதாக கலால் திணைக்கள பேச்சாளர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மதுபானங்கள் மீதான கலால் வரியை திருத்தியமைக்க கலால் திணைக்களம் அதன் தகுதியான அதிகாரமான நிதியமைச்சகத்திடம் இருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் பெறவில்லை, எனவே மதுபானங்களின் விலை குறைக்கப்படாது என்றார்.

எனவே மதுபானங்களின் விலை குறைப்பு குறித்த செய்திகள் பொய்யானதும், அடிப்படை ஆதாரமற்றதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கலால் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி டெய்லி மிரருக்கு கருத்துத் தெரிவிக்கையில், விலைவாசி உயர்வினால் நாட்டில் மதுபான பாவனை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திணைக்களத்திற்கு ரூ.232 பில்லியன் புதிய வருடாந்த இலக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

2023 ஜனவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் மதுபான உற்பத்தி 650,000 லீற்றர் குறைந்துள்ளதால் இந்த எண்ணிக்கையை அடைவது கேள்விக்குறியாக உள்ளது என குணசிறி கூறினார்.