இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை .

 


இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று 20ஆம் திகதி முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.