மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின முன்னாயத்த கலந்துரையாடல் இடம் பெற்றது .

 







மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (01) திகதி இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். கோபாலரத்தினம் கலந்து கொண்டு மகளிர் தின விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் கொண்டமான் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், பொறியியளாலர்கள் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.