முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்கு மூலத்தில் என்ன தெரிவித்துள்ளார் என்ற விடயம் வெளிவர வேண்டும்- கோவிந்தன் கருணாகரன்

 

 

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக  வழங்கிய வாக்கு மூலத்தில் என்ன என்ற விடயம் வெளிவர வேண்டும். அவர் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்  - மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் .கோவிந்தன் கருணாகரன்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ரகசிய போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி அவர் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்த காலத்திலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது
 இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்திருந்தனர் சன்னல் 4 தொலைக்காட்சி TMVP  கட்சியினரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டு இருந்தனர்
அக்கட்சியின் தலைவர் பிள்ளையான் அவர்கள் இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டு அதில் பல விடயங்களை தெரிவித்திருக்கின்றார் இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்களை தனக்குத் தெரியும் என வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்
 நாட்டின் அதிபராக இருந்த மைத்திரி தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படையாகக் கூறி மனித உயிர்களைப் பலி எடுத்த சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன் நிறுத்த அவர் துணை போக வேண்டும் இந்த ஈஸ்டர் படுகொலை யாருக்காக நடத்தப்பட்டது எதற்காக நடத்தப்பட்டது என்ற உண்மைகள் வெளிவர வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்கு மூலத்தில் என்ன தெரிவித்துள்ளார் என்ற விடயம் வெளிவர வேண்டும். ஆனால் அவர் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்
 என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஆகிய.கோவிந்தன் கருணாகரன் அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.