மட்டு.புதுமுகத்துவாரம் சப்தரிஷி ஆலயத்தில் மகாசிவராத்திரி!




(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் சப்தரிஷி காயத்திரி ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) மகா சிவராத்திரி சிறப்பாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சப்தரிஷி ஆலயச் செயலாளர் த.குணரெத்தினம் தெரிவித்தார்.

இதன்போது சமூத்திரத் தீர்த்தமானது காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை  லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ம்ருத்ஞ்ஜய யாகம் இரவு 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நிகழ்த்தப்படவுள்ளது.

அத்தோடு முதலாம் ஜாமப்பூஜை கல்லடி நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியர்களாலும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஜாமப் பூஜைகள் காயத்திரி குடும்பத்தினராலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இதனைச் சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சைவத் திருநெறி மன்றத்தினரால் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.