வி.ரி.சகாதேவராஜா
பொத்துவில் கோமாரி பகுதியில் 52 வயது மதிக்கத்தக்க ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் யானையால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (15) அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் கோமாரி களுகொல்ல இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: இன்று அதிகாலை குறித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி சகபாடிகளுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென்று வீதியால் வந்த யானை அவரை தாக்கியுதோடு ஏனையோர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
மேலும்,இவரது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.