வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் மரணம்

 


பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தப்பட்டவர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

 காரைநகரில் இருந்து பொன்னாலை ஊடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார்.

இதன்போது, குறித்த தம்பதியினரை வாளுடன் காரில் காரைநகர் நோக்கி பயணித்தவர்கள் அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.

இந்நிலையில் கடற்படையினர் எமக்கு பிரச்சினை வரும் வெளியேறுமாறு கூறி தம்பதியினரை வௌியேற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடற்படை முகாம் முன்னே இளைஞனை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் குறித்த வன்முறைக் கும்பல் கடத்தி சென்ற நிலையில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் சந்தேநபர்களால் காயங்களுடன் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளான்.