காத்தான்குடி ஊடக அமையத்திற்கு சமய நல்லிணக்க செயற்பாட்டாளர் பொகவந்தலாவ ராகுல தேரர் விஜயம் சமாதான செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கினார்.













ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு

காத்தான்குடி ஊடக அமையத்திற்கு சமய நல்லிணக்க சமாதான செயற்பாட்டாளர் சங்கைக்குரிய பொகவந்தலாவ ராகுல தேரர் நேற்று மாலை விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு மாநகர முஸ்லிம் சமுக அபிவிருத்தி இன நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சமாதான செயற்பாட்டாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

.காத்தான்குடி முன்னாள் நகர சபை உறுப்பினர் மர்சூக் அஹமட் லெப்பை காத்தான்குடி ஊடக அமையத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எச்.எம்.எம்.முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுகளில் இனங்களிடையே நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சங்கைக்குரிய பொகவந்தலாவ ராகுல தேரர் சமயங்களையும் நல்லிணக்கம் எனும் தலைப்பில் தமிழில் உரையாற்றினார்.