ஆலையடிவேம்பில் கால்நடை கூட்டுறவுச் சங்கம் திறந்து வைப்பு.

















(கல்லடி செய்தியாளர்)

ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாயக் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா இன்று புதன்கிழமை (13) இடம்பெற்றது.

கால்நடை பாற்பண்ணையாளர் விவசாயக் கூட்டுறவுச் சங்கச் தலைவர் சின்னத்தம்பி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வினாசித்தம்பி பபாகரன், திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரகுமார் மற்றும் ஆலையடிவேம்பு கால்நடை வைத்திய அதிகாரி  ரி.கோகுலதாஸ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.