தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் தெளிவூட்டல் கருத்தரங்கு!








(கல்லடி செய்தியாளர்)

2021 மற்றும் 2022 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரு தொகுதி ஆசிரிய பயிலுனர்களை ஒரே தடவையில் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரிகளுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (22) குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 இதில் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரெத்தினம், விரிவுரையாளர்களான சி.லோகராஜா, ச.கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பாடநெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பாக சிறப்பான தெளிவூட்டல்களை வழங்கியதோடு, விண்ணப்பதாரிகளுக்கிருந்த சந்தேகங்களையும் போக்கினர்.

 மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பெருந்தொகையான விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டதோடு, வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான என்.குகதாசன், ரி. யசோதரன் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரி. குணரெட்ணம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.