களுத்துறை தொடங்கொட ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் புனராவர்தன மஹா கும்பாபிஷேகத்தில் தைலாப்பியங்கம் என்கின்ற எண்ணெய் காப்பு நிகழ்வு கும்பாபிஷேக பிரதம சிவாச்சார்யார் அச்சுவேலி சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க வைத்தீஸ்வர குருக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
அடியார்கள் தங்களின் கைகளினால் சுவாமிகளின் திருவுருவத்திற்கு எண்ணெய் சாத்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்
அதனைத் தொடர்ந்து அகிலமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும்
சிவநெறிய திருமுறை விண்ணப்பம் மற்றும் தேஜஸ்வராலய கலைக்கூட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மேலும் பயாகல இந்து வித்தியாலய மாணவர்களின் திருமுறை விண்ணப்பம், கூட்டுப்பிரார்த்தனை வழிபாடும் நடைபெற்ற சிறப்பாகும்.