மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழாவும், பாலர் பாடசாலை திறப்பு விழாவும்
நடைபெற்றது.
அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில், நிகழ்வு நடைபெற்றது.
இவ்வருடம்
புதிதாக பாலர் பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் மலர்மாலை அணிவித்து
வரவேற்கப்பட்டனர். சிறார்களின் கிராமியக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,
மட்டக்களப்பு ராமகிருஸ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி
நீலமாதவானந்தாஜியினால் மாணவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டு, புதிய பாடசாலையும்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சிவ ஸ்ரீகிரிதரக்குருக்கள்,
சிறுவர் நன்னடத்தை அதிகாரி பா.சந்திரகாந்தன், சமூக செயற்பாட்டாளர்கள், எனப்
பலரும் கலந்து கொண்டனர்.