கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயரில் பாதுகாப்பு படையினர் வசம் இருந்த காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு .













வரதன்


பாதுகாப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக பாதுகாப்பு  படைவசம் இருந்த பொதுமக்களின் காணிகள் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக உரியவர்களிடம் மீள் ஒப்படைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதேவேளை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளியந்தீவு பகுதியில் கடந்த 24 வருடங்களாக பாதுகாப்பு படையினர் வசம் இருந்த மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி  லைட் ஹவுஸ் திருச்சபை ஜெப மையத்தின் காணியானது விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்ததன் பின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜெப ஆலயம் இன்று சுப நேரத்தில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக மீள் பிரதிஷ்ட செய்து திறந்து வைக்கப்பட்டது .
 தேவாலயதின்  சிரேஸ்ட போதகர் அருட்பணி கே.விஜயன் தலைமையில் இடம் பெற்ற இவ்  விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதன் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே. எம். ஏ.கே. பண்டார,அருட்பணி கே. கிருஸ்னராஜா, போதகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டு விசேட வழிபாடுகளும் இங்கு இடம் பெற்றதுடன் இதற்காக உதவிய அரசாங்கத்தின் பேரில் மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு கௌரவிக்கப்பட்டார்