சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

 



கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது,  சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.