மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


பொல்கஹவெல - யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஏனைய மாணவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.