நிரந்தர பாலமொன்றை அமைத்துத் தருமாறு அம்பிளாந்துறை , மற்றும் குருக்கள்மடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  அம்பிளாந்துறை கிராமத்தையும்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துமார்க்கமாக காணப்படும் பாதை இயந்திர படகு  பாதையே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது.


 நாளாந்தம் இப் பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமல் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரயாணம் செய்து வருகின்றனர். மேலும் பாதையின் தட்டி மற்றும் சங்கிலிகள் உக்கிய நிலையில் வெடித்து காணப்படுகின்றது


 அதை கம்பு வைத்து கட்டியுள்ளனர். இன்னுமொரு கின்னியா குறிஞ்சாங்கேனி பாதை விபத்து இடம்பெறாமல் இருக்க உரிய அதிகாரிகள் தமக்கான நிரந்தர பாலமொன்றை அமைத்துத் தருமாறு அம்பிளாந்துறை  , மற்றும் குருக்கள்மடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை உரிய அதிகாரிகள் உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.