ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் அவருக்கு ஆசிர்வாதம் வேண்டி இன்று விசேட வழிபாடுகள் முன்னெடு க்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டி இன்று மட்டக்களப்பு புளியந்திவு சித்திர வேலாயுத சுவாமி தேவாலயத்தில் ஆலய பிரதம குருசிவ ஸ்ரீ பகீரத சர்மா தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சங்கரதாஸ் மகேந்திர ராஜா ஏற்பாட்டில் இன்றைய ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய இந்த விசேட வழிபாட்டு நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமையாளரும் சமாதான நீதானமான குணா லிங்க ராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி முருகப்பெருமானுக்கு விசேட அர்ச்சனை பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது..