பொருளாதார ரீதியில் நலிவுற்று வாழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்காக, மட்டக்களப்பு
களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கம் இன்று கற்றல் உபகரணங்களை வழங்ககியது.
கட்டார் நாட்டில் தொழில்புரியும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில், அகரம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில்
கற்றல் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கிஷோபன் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.