மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி!























































































































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி நவகீத்தா தர்மசீலன் தலைமையில் கல்லடி- உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது.

பாடசாலை மாணவிகளின் பாண்டு வாத்திய இசை முழங்க, அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்து மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வின் ஆன்மீக அதிதியாக கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீயும்,பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான பொறியியலாளர் என்.சிவலிங்கமும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இதன் போது அதிதிகளுக்கு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் 664 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை சாரதா இல்லமும், 651 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினை நிவேதிதா இல்லமும், 402 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினை அபவாமியா  இல்லமும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந் நிகழ்வின்  விசேட அதிதிகளாக மண்முனை- வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் மண்முனை- வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.பிரபாகரன் ஆகியோரும், கெளரவ அதிதிகளாக பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருமதி ஜே.கஜேந்திரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பி.வேந்திரராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.