நாமலுக்கு இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம்?

 


நாமலுக்கு இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என நினைக்கிறேன் என்று ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் ஐந்திலிருந்து பத்து வருடங்களில் அவர் போட்டியில் கலந்துகொள்ளும் அனுபவத்தைப் பெறலாம். அப்போது இந்த நிலையை புரிந்துகொண்டு தேர்தல் பணிகளைத் தொடங்கி புதிய பின்னணியை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அந்த சவாலை ஏற்று அதை எதிர்பார்க்கலாம் என்றால், அந்தப் பொறுப்பை ஏற்று அதைச் செய்வது சரிதான் என்றார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது ஜனாதிபதி வேட்பாள் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு எனக்கு தெரியவில்லை என்றும் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.