மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு கலாச்சார பிரிவினரின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்திற்காக கலைப்பணி ஆற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வாசிகசாலை அருகா மையில் உள்ள வெளியேறங்கில் நேற்று இரவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவலக அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் நந்தன கெட்டி ஆராய்ச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவலக அமைச்சின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரண சிங்க கலந்து கொண்டனர்