(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா கல்லூரி விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (12) சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை மைதானத்துக்குள் பலவந்தமாக மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூன்று இளைஞர்கள் உட்பிரவேசிக்க முயன்ற வேளை அவர்களைத் தடுக்க முயன்ற மைதான வாயிற் காவலாளி மீது பலமாகத் தாக்கியுள்ளனர்.இதன்போது குறித்த காவலாளிக்கு இரத்த காயமேற்பட்டுள்ளது .இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விளையாட்டு மைதானத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது
தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது
இது குறித்து காத்தான்குடி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.