அவுஸ்திரேலியாவில் நிலவும் அதிக வெப்ப அலை காரணமாக இலங்கை வயோதிப தம்பதிகள் இறந்தனரா?

 


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

12ஆம் திகதி பிற்பகல் மெல்பேர்ன் மில்லியனர்ஸ்ரோ வீதியில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Doyne Caspersz  மற்றும் அவரது மனைவி Marlene Caspersz ஆகியோரே இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

70 மற்றும் 80 வயதுக்குட்பட்ட இவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத போதிலும், இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸார் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவர்களது மரணத்திற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் அதிக வெப்ப அலை காரணம் என்றும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த தம்பதியினர் சுமார் இருபத்தைந்து வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உப தலைவராகவும் Doyne Caspersz கடமையாற்றியுள்ளார்.