மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பகுதியில் பகல் வேளையிலேயே கிராமத்திற்குள் படையெடுத்த காட்டுயானைகள்.







 வரதன்


மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் இன்று  உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பபுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டிருந்தது.

 இன்றயதினம் 5 காட்டுயானைகள் கூட்டமாக வெல்லாவெளிப் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்ட நிலமை ஏற்பட்டிருந்தது. இதனால் கால போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும் பெரும் பதட்டத்தின் மத்தியில் அவர்களது வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.
 
இந்நிலையில்  வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் யானை வெடிகளை கொழுத்தி ஒருவாறு அப்பகுதி  காட்டுப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை துரத்தி விட்டுள்ளனர்.

 எனினும் அப்பகுதியில் மிக நீண்டகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசங்களும். தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.