வரதன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெண்களின் உரிமைகள் சம்பந்தமாக பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது. இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட. தாயாக கரம் கொடுப்போம் ஏன்னும் கருப் பொருளுக்கு அமைவாக மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் ஆனது மட்டக்களப்பு லேக் வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகள் ஊடாகச் சென்று அரசடி வரை சென்றது.
கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இன்றைய இந்த நிகழ்விற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பு பிரசாந்தன் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கட்சியின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டதுடன் சர்வதேச மகளிர் தினத்தில் தங்களது உரிமைகள் பாதுகாப்பு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.