அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!!

 




 

 








 
ரியல் லுக் அக்கடமியில் (Real Look Academy) கல்விகற்ற அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவன இயக்குனர்களான கந்தசாமி பத்மாவதி, திருமதி எஞ்சாலா சிசாந் தலைமையில் (02) திகதி கல்லடி தனியார் விடுதியில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
தேசிய தொழில் தகமை (IV) ஒரு வருட கால கற்கை நெறியை நிறைவு செய்த அழகு கலை நிபுணர்கள், சீகை அழங்கார நிபுணர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் பெண்களுக்கு சுய தொழில் மற்றும் தொழில் வாய்ப்பை ஊக்குவிப்பதற்கு தொழில் தகமை சான்றிதழ் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்றாம் நிலை கல்விக்கான ஆணைக்குழுவின் அனுமதி பெற்று இந் நிறுவனம் மட்டக்களப்பில் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது அதிதிகளுக்கு நினைச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மணமகள் அழங்கார கண்காட்சி, கண்கவர் நடனங்கள் என்பன இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட தொழிற்துறை அபிவிருத்தி சபையின் பொறுப்பதிகாரி எஸ்.கெளசல்யா, மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர் கருணாகரன்,
கைத்தொழில் மேம்பாட்டு உத்தியோகத்தர் கோகுலதாஸ் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.