(கல்லடி செய்தியாளர்)
பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா தேவாலய போதகர் இக்னேசியஸின் ஆசீர்வாதத்துடனும், பங்கு மக்களின் பங்கேற்புடனும் இன்று வெள்ளிக்கிழமை (29) திருச்சொரூப ஊர்வலம் இடம்பெற்றது.
கல்லடி பழைய கல்முனை வீதியிலுள்ள விநாயகர் வித்தியாலய முன்றலிலிருந்து ஆரம்பமான திருச்சொரூப ஊர்வலமானது பழைய கல்முனை வீதியூடாக தேவாலயத்தைச் சென்றடைந்தது.
இதன்போது பங்கு மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.