விமல் வீரவன்சவுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கின் விசாரணையை நிறைவு செய்ய முடியாதுள்ளது.

 


10 வருட காலத்திற்குள் முறையான வருமானம் மற்றும் சொத்துக்கள் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவிற்கு மேல் சம்பாதித்த விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு  அழைப்பாணையை விடுத்துள்ளார்.

 விமல் வீரவன்சவுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கின் விசாரணையை  நிறைவு செய்ய முடியாதுள்ளது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா சுட்டிக்காட்டியுள்ளார்.  

 நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச 2009 ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டரீதியான வருமானத்தின் மூலம் சம்பாதிக்கவில்லை என  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

75 மில்லியன் ரூபா வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டமை இலஞ்ச சட்டத்தில் பகுப்பாய்வு செய்யப்படும் ஊழல் எனப்படும் இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.