சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கினர் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட தனது நூலில் தெரிவித்துள்ளார்.
'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி' என்ற பெயரிலான இந்த நூல் நேற்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை, அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் சதி மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாம் இராஜினாமா செய்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.